அமிர்தி வனப்பகுதியில் கனரக வாகனங் கள் சென்று தார் சாலை சேதம் கிராம சபை கூட்டத்தில் சமூக ஆர்வலர் கோரிக்கை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 ஜனவரி, 2026

அமிர்தி வனப்பகுதியில் கனரக வாகனங் கள் சென்று தார் சாலை சேதம் கிராம சபை கூட்டத்தில் சமூக ஆர்வலர் கோரிக்கை !

அமிர்தி வனப்பகுதியில் கனரக வாகனங் கள் சென்று தார் சாலை சேதம்  கிராம சபை கூட்டத்தில் சமூக ஆர்வலர் கோரிக்கை !
வேலூர் ,ஜன 26 -

வேலூர் மாவட்டம்  அமர்த்தி வனப்பகுதி யில் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால்  தார் சாலை சேதம் குடியரசு தினமான இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்த கோரிக் கை வைத்தார் இன்று குடியரசு தின விழா வையொட்டி, வேலூர் மாவட்டம் அமர்த்தி வனவிலங்கு காப்பகம் செல்லும் சாலை வழியாக மலையிலிருந்து மலை மண் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப் படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்ற னர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் அமைக்கப்பட்ட தார் சாலை கடுமையாக சேதமடைந்து, மேடு பள்ளங்களாக மாறி வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் அச்சத்து டன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு ள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த சூழ்நிலையில், இன்று பல கிராமங்களில் நடைபெறும் கிராம சபா கூட்டங்களில்,
“கனரக வாகனங்கள் எங்கள் கிராம சாலைகள் வழியாக செல்லக் கூடாது” என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண் டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், வனப்பகுதி சாலைகளில் கனரக வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad