சாலை பாதுகாப்பு குழுமம் ரெட் கிராஸ் சங்கம் ஆர்.ஐ சி டி கல்வி நிறுவனம் போக்குவரத்து காவல் பிரிவு சாலை பாது காப்பு விழிப்புணர்வு பேரணி !
வேலூர் , ஜன 29 -
வேலூர் மாவட்டம் சாலை உபயோகிப் போர் பாதுகாப்பு குழுமம், காட்பாடி ரெட் கிராஸ் சங்கம், ஆர்ஐசிடி கல்வி நிறுவ னம் காட்பாடி போக்குவரத்து காவல் பிரிவு இணைந்து போக்குவரத்து மாத விழாவினை முன்னிட்டு போக்குவரத்து விழிப்புணர்வு பேரணியை 10.30 மணி யளவில் காட்பாடி காந்திநகர் கங்கேய நல்லூர் சந்திப்பு சாலையிலிருந்து புறப்பட்டது. காட்பாடி சரக காவல் துறை துணை கண்காணிப்பாளர் விஜியகுமார் பேரணியை தொடக்கிவைத்தார்
சாலை உபயோகிப்போர் குழுமத்தின் டாக்டர் அ. மு. இக்ராம் காட்பாடி ரெட்கி ராஸ் அவைத்தலைவர் முனைவர் செ. நா.ஜனார்த்தனன் ஆகியோர் தலைமை யில் பேரணி நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வி.பாரி வள்ளல் ஆர் ஐ சி டி கல்வி நிறுவன இயக் குனர் டாக்டர்.கே.எஸ்.அசரப் போக்கு வரத்து காவல் குழுமத்தின் செயலாளர் ஆர்.சீனிவாசன் துணைச் செயலாளர் பி.என்.ராமச்சந்திரன் காட்பாடி ரெட் கிராஸ் அவை துணைத் தலைவர் ஆர்.விஜயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர் காட்பாடி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் உமாசங்கர் விருதம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் பரத் டாக்டர் வீ.தீனபந்து பொருளாளர் வி.பழனி தணிகை செல்வம் டீகாராமன் பாரா மெடிக்கல் கல்லூரி ஆசிரியர் பிரசாந்த் மாணவர்கள் 150 பேர் பேரணி யில் பங்கேற்றனர். விழிப்புணர்வு பேரணி காந்திநகர் கல்யாண மண்டபம் அருகில் இருந்து புறப்பட்டேன் சில்க் மில் சாலை சந்திப்பு வழியாக ஓடைபிள்ளை யார் கோயில் சாலை சந்திப்பு ஆக்சிலி யம் கல்லூரி சாலை சந்திப்பு வழியாக மீண்டும் கல்யாண மண்டபம் சந்திப்பில் நிறைவு பெற்றது பங்கேற்ற மாணவர் கள் சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவோம் நம் உயிரை பாதுகாப்போம், சாலை விதிகளை மதிப்பேன் உயிர் இழப்பை தடுப்பேன், சாலை சாகசம் செய்வதற்கல்ல, என்பன போன்ற கோஷங்களை எழுப்பினர் பங்கேற்ற மாணவர்களுக்கு தண்ணீர் பிஸ்கட் குளிர் பாணங்கள் வழங்கப் பட்டது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக