அரசு உயர்நிலைப்பள்ளியில் டி.கே.எம். கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை இணைந்து உடல் நலம் மற்றும் அறிவியல் விழிப்புணர்வு !
வேலூர் ,ஜன 13 -
வேலூர் மாவட்டம் அரியூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் டி.கே.எம். தன்னாட்சி கல்லூரி கிளையும் கல்லூரியின்விலங்கி யல் துறையும் இணைந்து உடல் நலம் மற்றும் அறிவியல் விழிப்புணர்வுக்கான அனுபவக்கற்றல் நிகழ்வு 13.01.2026 ல் நடைபெற்றது.நிகழ்விற்கு கல்லூரியின் விலங்கியல் துறை தலைவர் முனைவர் டி.சசிகலா தலைமை தாங்கினார். அரசுப்பள்ளியின் தலைமையாசிரியர் (பொறுப்பு) எம்.சுரேஷ்குமார்வரவேற்றார் கல்லூரியின் பேராசிரியர்கள் வி.ரேகா, ஜி.வித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் அனுபவக்கற்றல் நிகழ்வு குறித்த கண்காட்சியினை தொடக்கிவைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது.. மாணவிகள் தங்களின் கற்றல் அனுபவங்களை பெற வேண்டும் என கல்லூரியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவிகள் அனைவரும் பல்வேறு தலைப்புகளில் அறிவியல் உபகரணங்களையும் அதற்கான செயல் விளக்க மாதிரிகளை தயார்த்து விளக்கம் அளித்தது சிறப்பாக இருந்தது. அரசுப் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளத பாராட்டதக்கது. இப் பள்ளி மாணவ மாணவிகளும் பல்வேறு தலைப்புகளில் செயல் விளக்கம் பெற்று ள்ளனர். கற்றல் அனுபவங்களை கொண்டு மாணவிகள் தங்களை வளர்த் துக் கொள்ளுங்கள் உங்களால் இந்த நாட்டையும் வளர்த்தெடுங்கள் என்றார்.
கல்லூரி மாணவ பிரதிநிகள் டி.அர்ச் சணாதேவி, எஸ்.பிரியா பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் எஸ்.சதீஷ்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பள்ளியில் பயிலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர்.
இந்த அனுபவ பகிர்வு அறிவியல் கண் காட்சியில் சீரண மண்டலம், சிறுநீரகம், நுறையீரல், இனப் பெருக்க மண்டலம், மரபணு, பல், கண், காது, மூக்கு மற்றும் தொண்டை ஆகிய மனித உடலியல் பாகங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள், கோளறுகள், பிரச்சனைகள் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் பிளாஸ் டிக் பயன்பாடுகளை தவிர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் நோய் எதிர்ப்பு தன்மை குறித்தும் செயல்விளக்கம் அளித்தனர். யோகா, முத்ரா நிகழ்வு களையும் செய்து காண்பித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக