இருசக்கர வாகன விபத்தில் மருத்து வமனையில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் !
ஆம்பூர், ஜன 13 -
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள விண்ணமங்கலம் கிராமம் ஆத்துக் கொல்லையைச் சேர்ந்த வெங்கடேசன் கண்ணன் (வயது 50 ) டிவிஎஸ் ஸ்கூட்டி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திடீரென அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திறந்ததில் பலத்த காய மடைந் தார். ஜனவரி 11 ஆம் தேதி சிஎம்சி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜனவரி 12 ஆம் தேதி மாலை 5 மணியள வில், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள் ளனர். இதயம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், கல்லீரல், சிறு நீரகங்கள் மற்றும் கண்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும் வழங்கப் படுகின்றன. அவரது மனைவி, கஸ்தூரி என்பவரும் (27 வயது) மகள் இந்துமதி மற்றும் (19 வயது )மகன் வசந்த்குமார் ஆகியோர் உள்ளனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக