இந்திய இராணுவத்தில் மகளிர் இராணுவ காவலர் (WMP) பணி உட்பட அனைத்து வகை பணிகளுக்கான இந்திய இராணுவ அக்னி வீரர் ஆட்சேர்ப்பு முகாம்!
காட்பாடி , ஜன 13 -
வேலூர் மாவட்டம் காட்பாடி பிப்ரவரி 05 முதல் பிப்ரவரி 13, 2026 வரை வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இந்திய இராணுவத்தில் மகளிர் இராணுவ காவலர் (WMP) பணி உட்பட அனைத்து வகை பணிகளுக்கான இந்திய இராணுவ அக்னிவீரர் ஆட்சேர்ப்பு முகாம்.
வேலூர் மாவட்டத்தில் இந்திய இராணு வத்தில் மகளிர் இராணுவ காவலர் (WMP) பணி உட்பட அனைத்து வகை பணிகளுக் கான இந்திய இராணுவ அக்னிவீரர் ஆட்சேர்ப்பு முகாம் வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் பிப்ரவரி 05 முதல் பிப்ரவரி 13, 2026 வரை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் கடந்த ஜூன் 30, 2025 முதல் ஜூலை 10, 2025 வரை எற்கனவே நடத்தப்பட்ட இராணுவ பொது நுழைவுத் தேர்வில் (CEE) தகுதி பெற்ற தமிழ்நாடு மாநிலம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் குழுவைச் சேர்ந்த தகுதி பெற்ற தேர்வர்கள் பங்கேற்கலாம். ஆட் சேர்ப்பு முகாமிற்கு வரும் தேர்வர்கள் கண்டிப் பாக தங்களின் அனுமதி அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நாள். நேரம் மற்றும் இடத்தில் மட்டுமே பங்கேற்க்க வேண்டும், தவறினால் அவர்கள் ஆட்சேர்ப்பு முகா மில் பங்கேற்க அனுமதிக்கப் பட மாட்டார்கள்.தேர்வர்கள் கடந்த மார்ச் 11 மற்றும் 12, 2025 தேதியிட்ட ஆட்சேர்ப்பு முகாமிற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பு களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். இவ்வறிவிப்பு இந்திய இராணுவத்தின் அதிகாரப்பூர்வ வலைத் தளமான www.joinindianarmy.nic.in 6 . Agniveer General Duty (All Arms). Agniveer Technical (All Arms). Agniveer Office Assistant/Store Keeper Technical (All Arms). Agniveer Treadesman 10th Pass (All Arms), Agniveer Treadesman 8th Pass (House Keeper and Mess Keeper) (All Arms) மற்றும் Agniveer General Duty Women in the Corps of Military Police பணிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான விரிவான தகுதி மற்றும் வழிமுறைகள் உள்ளன. தேர்வர்கள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங் களின் அசல் அனுமதி அட்டை மற்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தேவை யான எண்ணிக்கையிலான சுய சான்ற ளிக்கப்பட்ட நகல்களுடன் முகாமில் கலந்து கொள்ளவேண்டும்.முந்தைய ஆட்சேர்ப்பு முகாம்களில் தேர்வர்கள் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற போதிலும், தகுதியற்ற. தவறான அல்லது போதுமான ஆவணங்கள் இல்லாததால் பல தேர்வர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். எனவே, தேர்வர்கள் ஆட்சேர்ப்பு முகாம் களின் எந்த கட்டத்திலும் தகுதியிழப் பினை தவிர்க்க, அறிவிப்பினை கவன மாகப் படித்து கண்டிப்பாகப் அதில் குறிப்பிட்டபிட்டுள்ளாறு பின்பற்ற வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகி றார்கள். ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் ஆண் தேர்வர்கள் இந்திய இராணுவத் தரநிலைகளின் படி, ஒழுங் கான சிகை அலங்காரம் (ஹேர்கட்டிங் மற்றும் சேவிங்) பின்பற்றி சரியான இராணுவத் தோரணையுடன் இருக்க வேண்டும்.மேலும் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத தேர்வர்கள் தகுதியிழப்பிற்கு வழி வகுக்கும் . ஆட்சேர்ப்பு நடைமுறையானது முழுவதும் நியாயமாகவும். வெளிப் படைத் தன்மையுடனும் மற்றும் முற்றிலும் தகுதி அடிப்படையிலானது, மேலும் அனைத்து நிலைகளிலும் தேர்வு Fully Automated என்பதால் எந்தவொரு தனிநபர், முகவர் அல்லது தரகர் தேர்வு செயல்முறையை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது. மேலும் தேர்வர்கள் பணம் செலுத்தவோ அல்லது ஆட்சேர்ப்புக்கு உத்தரவாதம் அளிப் பதாகக் கூறி யாரையும் நம்பவோ கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த காலங்களில், போலி உடல் தகுதித் தேர்வு (Physical Fitness Test - PFT Slips) சீட்டுகளை வழங்குவதின் மூலம் ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம் செய்தல். போலி ஆட்சேர்ப்பு முகாம்கள் நடத்துதல், தரகர்கள் அசல் சான்றிதழ்களைப் எடுத்து வைத்து கொள்ளுதல், தவறான சாக்குப்போக்கு களின் பேரில் அனுமதி அட்டைகளை எடுத்துச் செல்லுதல், மற்றும் தங்களுக்கு உயர் அலுவலர்கள் தெரியும் எனக் கூறி தேர்வு செய்வதாக தவறான உறுதி மொழிகளை வழங்குதல் போன்ற மோசடிகள் மூலம் பலதேர்வர்கள் தரகர்களிடம் ஏமார்ந்து உள்ளனர். அத்தகைய தேர்வர்கள் இறுதியில் இராணுவத்தில் சேரும் தகுதியினை இழந்துள்ளனர்.எனவே தேர்வர்கள் விழிப்புடன் இருக்கவும், தங்கள் அசல் ஆவணங்கள் மற்றும் அனுமதி அட்டை களை எல்லா நேரங்களிலும் கவனமாக வைத்திருக்கவும், ஏதேனும் சந்தேகத்திற் கிடமான செயல்பாடு இருப்பின் உடன் புகாரளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வர்கள் தரகர்கள் மற்றும் முகவர்களு டன் சேர்ந்து கொண்டு ஆட்சேர்பில் ஈடுபடுவது அல்லது போலி ஆவணங் களைச் சமர்ப்பிப்பது போன்ற செயல் களில் ஈடுபடுபவர்களின் மீது மிக கடுமையான சட்ட மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.ஆட்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் தேர்வர்க ளுக்கான நுழைவுச் சீட்டுகள் www.joinindianarmy.nic.in இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. தேர்வர்கள் மேற்படி இணையதளத்தில் உள்நுழைவு செய்து தங்களின் login profile ல் உள்ளிடு செய்து விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தை அவ்வப்போது தவறாமல் பார்வையிட்டு தேர்வு சம்மந்தமான Updates குறித்து தெரிந்துகொள்ள அறிவுறுத்தப் படுகிறார்கள். தேர்வர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Recruiting Office. (Head Quarters) Chennai, Saint Fort George Chennai 600009 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தையோ அல்லது 044-25674924 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி. தெரிவித் துள்ளார்
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக