தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு குளச்சல் போக்குவரத்து காவல்நிலையம் சார்பில் சுங்கான்கடை ஸ்ரீ ஐயப்பா கல்லூரி மற்றும் ஷெர்லின் ஓட்டுனர் பயிற்சி பள்ளி இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.
இதில் கல்லூரியின் வரலாற்று பிரிவு மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கல்லூரியில் இருந்து சுங்கான் கடை பேருந்து நிறுத்தம் வந்து 500 மீட்டர் தேசிய நெடுஞ்சாலையில் பேரணியாக சென்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி வாகன ஓட்டுனர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த பேரணியானது சுங்கான் கடை ஆளூர் திருப்பத்தில் திரும்பி மீண்டும் சுங்கான்கடை பேருந்து நிறுத்தத்தில் வந்து வாகன ஓட்டுனர்கள் மற்றும் பேருந்து நிறுத்த பயணிகளிடம் சாலை பாதுகாப்பு விதிகளை மதிக்காமல் செல்வதால் ஏற்படும் விபரீதங்களை பற்றி மாணவிகள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக