கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்பத்துகோணம் கார்த்திகை வடலி, ஆற்றோரம் உள்ள தென்னந்தோப்பில் நிர்வாணமாக வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலம்.
அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் கழுத்து, கை,கால்,முகம் என உடலில் பல்வேறு உறுப்பில் வெட்டு காயங்களுடன் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை.
மேலும் கொலையுண்ட நபர் யார்? அவரை கொலை செய்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை.
இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் ஒரு கொலை நடந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக