ஆம்பூர் அருகே மது போதையில் நண்பர் களிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் அடித்துக் கொலை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 31 ஜனவரி, 2026

ஆம்பூர் அருகே மது போதையில் நண்பர் களிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் அடித்துக் கொலை !

ஆம்பூர் அருகே மது போதையில் நண்பர் களிடையே ஏற்பட்ட  மோதலில் இளைஞர் அடித்துக் கொலை !
ஆம்பூர் -ஜன.31- 

   திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அரசு மதுபான கடை அருகே மாதனூர் ஒடுகத்தூர் செல்லும் சாலை யில் உள்ள மதுபான கடையில் சாமி நாதபுரம் பகுதியை சேர்ந்த  அப்புனு மற்றும் கோகுல் ஆகிய இருவரும் மது பாட்டில் வாங்கி சென்று அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் உள்ள கடை அருகில் அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்துள்ளனர்.அப்போது போதை தலை க்கேறி இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டு பின்னர் கோகுல் அங்கி ருந்த இரும்பு ட்ரம் மற்றும் பிளேட்டால் அப்புனு தலை மீது போட்டு கொடூரமாக தாக்கிய தில் அப்புனு தலை நசிங்கி சம்பவ இடத் திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்பூர் கிரா மிய போலீசார் விரைந்து சென்று பிரேதத் தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீ சார் வழக்கு பதிவு செய்து மது போதை யில் நண்பனை கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த கோகுல் என்ற இளை ஞரை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கோகுல் மீது ஏற்கனவே கஞ்சா மற்றும் கள்ளத் துப் பாக்கி வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

 மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad