திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கிய பொதுப் பணித் துறை அமைச்சர்!
திருவண்ணாமலை , ஜன 8 -
திருவண்ணாமலை மாவட்டம் தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் சிறப்பு தொகுப்பு பணம் ரூபாய்.3000 ஆயிரம் முழு நீள கரும்பு 1 ,பச்சரிசி 1 கிலோ , சர்க்கரை 1 கிலோ வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்புழுதியூர் வேளாண்மை கூட்டுறவு கடையில் செங்கம் பகுதியைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்களை வழங்கும் பணி களை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி யில் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் , செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி மற்றும் மேல்புழுதியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் கலையரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக