திருப்பத்தூர் நாலாவது 4 வது வார்டு நகர பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கல் பொதுமக்கள் மகிழ்ச்சி !
திருப்பத்தூர் , ஜன 8 -
திருப்பத்தூர் மாவட்டம் தமிழர் திரு நாளான தைப்பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் இன்று துவங்கியது. அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டம், நாலாவது 4 வார்டு நகர் பகுதியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டன.
தமிழக அரசு வழங்கும் இந்த பொங்கல் தொகுப்பில், ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூபாய் 3000 ரொக்கப் பணம், மேலும் ஆண்களுக்கு வேட்டி, பெண்களுக்கு சேலை ஆகியவைஅடங்கி யுள்ளது. இந்த பரிசுத் தொகுப்பு மூலம் ஏழை, எளிய மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட அரசு உறுதுணையாக இருப்பதாக நிகழ்ச் சியில் கலந்து கொண்ட தலைவர்கள் தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சியில் , திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். பொதுக்குழு உறுப்பினர்.டி ரகுநாத். நாலாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் கௌரி ஐயப்பன். நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஐயப்பன். நகர இளைஞரணி ரமணன். ஐ டிவி தொழில்நுட்ப அணி பிரேம்குமார்.4-வது வார்டு R.தேசிங்குராஜன் அவைத் தலைவர், வார்டு செயலாளர் இ.ஐயப்பன், பிரதநிதி P.T.சரவணன், S.பிரகாஷ், S. கோபிநாத்,B. ரகுநாதன் R. கருணாகரன், M.ராஜன்,K.நரசிம்மன்,M. ரவிச்சந்திரன்,V. வெங்கடேசன், S.D.பார்த்திபன்,G.பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நாலாவது வார்டு பகுதி யைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்கி தொடங்கி வைத்தனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக