காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் !
காட்பாடி ,ஜன.30 -
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலக நுழைவாயிலில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் காட்பாடி தாலுக்காவில் உள்ள 32 பஞ் சாயத்து கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலக த்தில் கழிப்பறைகுடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீனமயமாக்கம் செய் யப்பட்ட கிராம நிர்வாக அலுவலகமாக அமைத்து தர வேண்டும், கிராம நிர்வாக அலுவலகங்களில் TNPSC நேரடி நியமன முறையில் கல்வி தகுதியை பட்டப்படிப்பு என மாற்றி அமைத்து இடவேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் பத்தாண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வுநிலை கிராம நிர்வாக அலுவலர் எனவும், 20 ஆண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர் எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக