இந்திய நுகர்வோர் சம்மேளனம் CCI வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு 90 நாட்கள் 28 மாநிலம் 17000 கிலோமீட்டர் நுகர்வோர் விழிப்புணர்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 ஜனவரி, 2026

இந்திய நுகர்வோர் சம்மேளனம் CCI வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு 90 நாட்கள் 28 மாநிலம் 17000 கிலோமீட்டர் நுகர்வோர் விழிப்புணர்வு.

இந்திய நுகர்வோர் சம்மேளனம் CCI வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு 90 நாட்கள் 28 மாநிலம் 17000 கிலோமீட்டர் நுகர்வோர் விழிப்புணர்வு பாரத் யாத்ரா.

இந்திய நுகர்வோர் சம்மேளனம் நுகர்வோர் விழிப்புணர்வுக்காக கடந்த 25 ஆண்டுகளாக அயராது பாடுபட்டு வருகிறது. 25வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நுகர்வோர் நலனை பாதுகாக்கவும் நுகர்வோர் விழிப்புணர்வை அனைத்து தர மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தவும் பாரத் யாத்ரா என்று 28 மாநிலங்களில் 90 நாட்கள் 17,000 கிலோ மீட்டர் வெள்ளிவிழா பாரத் யாத்ரா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

குறிப்பாக தமிழ் மாநிலத்தில்23 மாவட்டத்தில் 25 சிறப்பு கூட்டங்கள் நடைபெற இருக்கின்றது. நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றமும், இந்திய நுகர்வோர் சம்மேளனம் இணைந்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.ரெங்கநாதன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சொ. உடையார், கல்லிடைக்குறிச்சி நுகர்வோர் பாதுகாப்பு இயக்க தலைவர் லயன் வீ. சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக இந்திய நுகர்வோர் சம்மேளனத்தின் தேசியபெருந்தலைவர் ஆனந்த் சர்மா, தேசிய செயல் தலைவர் டாக்டர் செல்வராஜ், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் தாழையூத்து காவல் உதவி ஆய்வாளர் அருண்ராஜா வாழ்த்துரை வழங்கினார்,தேசிய துணைத் தலைவர் செல்வம், தேசியபொதுச்செயலாளர்திருநாவுக்கரசு, தேசிய யாத்திரை செயலாளர் சஞ்சய் காந்தேவால், தேசிய செயற்குழுஉறுப்பினர்டேனியல்,ராஜபாளையம் இந்திய நுகர்வோர்சம்மேளனசெயலாளர் வசந்த் ஆகியோர்நுகர்வோர் விழிப்புணர்வு உரையாற்றினர். நுகர்வோருக்கான விழிப்புணர்வு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. 

கலப்படம் கண்டறிதல், தரமான அளவுகள்,தவறான விளம்பரங்கள் தடை செய்ய, செயற்கை நுண்ணறிவை நேர்வழியில் பயன்படுத்த, தர முத்திரைகள், நேர்மையான வணிகம் போன்ற பல்வேறு நுகர்வோர் விழிப்புணர்வு செய்திகள் மாணவ மாணவியருக்கு பகிரப்பட்டது. நிறைவாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன் நன்றி கூறினார். 

நிகழ்விற்கான ஏற்பாடுகளை இந்திய நுகர்வோர் செம்மையான மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் மனோகரன் சாமுவேல்,திருநெல்வேலி மாவட்ட துணை செயலாளர் கவிஞர் முத்துசாமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad