ஆனைமலைஸ் டொயோட்டாவுக்கு தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு விருது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 ஜனவரி, 2026

ஆனைமலைஸ் டொயோட்டாவுக்கு தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு விருது


திருநெல்வேலி, ஜன.08:


திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்ட ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்திற்கு, தொழிலக பாதுகாப்பு, விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பான பராமரிப்பு செயல்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக தமிழ்நாடு அரசு “தொழிலக பாதுகாப்பு விருது” வழங்கி கௌரவித்துள்ளது.


தமிழ்நாடு அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது. பணியாளர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு, தொழிலக பாதுகாப்பு விதிமுறைகளை தொடர்ச்சியாக கடைப்பிடித்து, பாதுகாப்பு பண்பாட்டை வலுப்படுத்தி செயல்பட்டதன் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விருது, ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தின் தொழிலாளர் நலன் குறித்த அக்கறையையும், சமூக பொறுப்புணர்வையும் மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.


இவ்விருதினை தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இயக்குநர் ஆகியோர் வழங்கினர். ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவன இயக்குநர் எம். ரகுராம் அவர்களை கௌரவிக்கும் வகையில், நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி ஆர். சேது ராஜன் மற்றும் மனிதவள மேலாளர் எம். புருனோ ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad