அம்மன்புரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டத்தை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 ஜனவரி, 2026

அம்மன்புரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டத்தை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர் வட்டம் அம்மன்புரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டத்தை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000/-ம் ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் அம்மன்புரம் ஊராட்சி நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டத்தை மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 
க.இளம்பகவத் தலைமையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்கள். 
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் திருச்செந்தூர் ஆர்.கௌதம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad