நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் என்சிசி மாணவர்களுக்கு சான்றிதழ் மாதிரி தேர்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 ஜனவரி, 2026

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் என்சிசி மாணவர்களுக்கு சான்றிதழ் மாதிரி தேர்வு.

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் என்சிசி மாணவர்களுக்கு சான்றிதழ் மாதிரி தேர்வு. 

நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப்பள்ளியில் என்சிசி மாணவர்களுக்கான ஏ சான்றிதழ் மாதிரி செய்முறை மற்றும் எழுத்துத்தேர்வு நடந்தது. 

இதில் 110 பேர் பங்கேற்று எழுதினர். நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படையின் தரைப்படை பிரிவினர் அகில இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஏ சான்றிதழ் ஆயத்த தேர்வு நடந்தது. 

இத்தேர்வினை நெல்லை 9 சிக்னல் கம்பெனி கமானண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பங்கஜ் நாராயணன் உத்தரவின் பேரில் ஜூனியர் கமிஷன் அதிகாரி சுபைதார் ஜெகத்சிங், கம்பெனி ஹவில்தார் மேஜர் சுந்தர் ஆகியோர் நடத்தினர். 

தலைமையாசிரியர் குணசீலராஜ், உதவித்தலைமையாசிரியர்கள் மெரிட்டன் சகரியா, சார்லஸ் திரவியம், ஜாய் எஸ்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆயத்த தேர்வை மர்காஷிஸ் பள்ளி மாணவர்கள் 37பேர், பணிக்கநாடார்குடியிருப்பு  கணேசர்பள்ளி மாணவர்கள் 40 பேர், ஆழ்வார்திருநகரி இந்து பள்ளி மாணவர்கள்33 பேர் எழுதினர். 

இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் ஏ சான்றிதழ் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர், ஓவிய ஆசிரியர் அலைக்சன் கிறிஸ்டோபர் மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad