ஆதரவு இன்றி மனநல பாதித்து சுற்றி திரிந்த நபரை மீட்டு அவரது குடும்பத் தாரிடம் ஒப்படைத்த வேலூர் மாவட்ட காவல் துறையினர் !
வேலூர் , ஜன 8 -
வேலூர் மாவட்டம் வேலூர் காவல் கண் காணிப்பாளர் ஆ. மயில்வாகனன் அறிவு ரையின்படி, வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெரியார் பூங்கா அருகில் ரோந்து பணி செல்லும் போது மனநலம் பாதிப்புக்குள்ளான ஒரு ஆண் நபரான திருவண்ணாமலை மாவட் டம் ஒண்ணுபுரம் பகுதியை சேர்ந்த சாமு ராய் என்பவரை மீட்கப்பட்டு, வடக்கு காவல் உதவி ஆய்வாளர் ரேகா முயற்சி யால் அவருக்கு முடி திருத்தம் செய்யப் பட்டு, பின் அவருக்கு தேவையான முதலுதவி செய்து, அவரை அருகிலுள்ள கிருஸ்துவ மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை கொடுக் கப்பட்டது.
5 வருடம் அவரது குடும்பத் தாரை இழந்து தனிமையில் இருந்ததாகதெரியவந்ததை அடுத்து அவர்களின் குடும்பத்தாரை தேடி கண்டுபிடித்து அவர்களுடன் இன்று 08.01.2026-ம் தேதி நல்ல முறையில் ஒப்ப டைக்கப்பட்டது என்று மாவட்ட காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக