பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள்!
திருப்பத்தூர் , பிப் 28 -
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் 62 மாணவ மாணவிகளின் பெற்றோர்களு க்கு பாத பூஜை செய்து மாணவ மாணவி களை வாழ்த்தினார்கள். மேலும் மாணவ மாணவிகளுக்கு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பள்ளி நிறுவனர் சிவப் பிரகாசம் பள்ளி தாளாளர் தீபா சிவப்பிர காசம் வழங்கி மாணவ மாணவிகளை வாழ்த்தினார்கள். உடன் பள்ளி முதல்வர் கிரிநாத் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாவட்ட செய்தியாளர்
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக