125 நாள் வேலை திட்டத்தை சீர் குலைக் கும் முயலும் திமுக அரசை கண்டித்து அஇஅதிமுக சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

125 நாள் வேலை திட்டத்தை சீர் குலைக் கும் முயலும் திமுக அரசை கண்டித்து அஇஅதிமுக சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் !

125 நாள் வேலை திட்டத்தை சீர் குலைக் கும் முயலும் திமுக அரசை கண்டித்து அஇஅதிமுக சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் !
குடியாத்தம், பிப் 13 -

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில்  கிராம  மக்களின் 125 வேலை திட்டத்தை ‌ சீர் குலைக்க  முயலும் ஸ்டாலின் அரசை கண்டித்து . அனைத்திந்திய அண்ணா திமுகவின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் BDOஆபிஸ் அருகில் குடியாத்தம் மேற்கு ஒன்றிய செயலாளர் T.சிவா, கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் எல் எஸ் வனராஜ்.
 ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி அவர்கள் கண்டன உரையாற்றினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சாய் ஆனந்த் ஜெகன் குட்டி ( எ ). வெங்கடேசன் சதீஷ் சரவணன் கைத்தறி காவலன் ரமேஷ். உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் நகர ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் பலர் பெருந் திரளாக கலந்து கொண்டனர்

வேலூர் மாவட்ட
செய்தியாளர் கே.வி.ஆர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad