கடந்த நவம்பர் மாதம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி தெப்பக்குளத்தில் அளவுக்கு அதிகமாக ஒப்பந்ததாரர் மண் அள்ளியதால் வடக்கு பகுதி சுற்று சுவர் இடிந்து விழுந்தது. அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சென்று பார்வையிட்டனர்.
ஆனால் அந்த பகுதி இளைஞர்கள் மண் எடுத்ததற்கு பல ஆதாரங்களை ஒப்படைத்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் நாம் தமிழர் கட்சியின் சார்பில் உடனே சம்பவ இடத்திற்கு வந்து நீதிமன்றம் வரை சென்று போராடி தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் மரிய ஜெனிபர் மற்றும் அந்தப் பகுதி நிர்வாகிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக