சங்கு எடுக்க முயன்ற மீனவர் பரிதாப பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

சங்கு எடுக்க முயன்ற மீனவர் பரிதாப பலி.

சங்கு எடுக்க முயன்ற மீனவர் பரிதாப பலி

இனயம் நடுத்தேரி பகுதியை சேர்ந்த ஏசுபாலன் 3 பேருடன் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் தேங்காப்பட்டினம் கடல் பகுதியில் சங்கு எடுப்பதற்காக சென்றார். 

சங்கு எடுத்து கொண்டிருக்கும்போது மூவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் வெளியே வந்த மூவரையும் மீனவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஏசுபாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுதொடர்பாக குளச்சல் கடலோர பாதுகாப்பு குழு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad