திருப்பூர் மாவட்டம் ஊதியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நொச்சிப்பாளையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தாராபுரம் மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்த நிலையில் நேற்று (09.02.2026) அதிகாலை 7 மணி அளவில் ஊதியூர் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் பேக்கரி அருகே மதுவிலக்கு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது
அப்போது சந்தேகத்திற்கு உள்ளான ஒரு நபரை அழைத்துப் பிடித்து அவரிடம் விசாரணை செய்தபோது ஒன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை அழைத்து வந்து தாராபுரம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் தாராபுரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ரவி & சார்பு ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர்கள் அவரிடம் விசாரணை செய்த நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஷன் பூர் பட்டியை சேர்ந்த கும்மூடு ஷாகனி மகன் ராம்குமார் (25) என்பவர் விற்பனைக்காக 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரிடம் வந்த கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்து காங்கேயம் நீதிமன்ற வளாகத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதிபதி குற்றவாளியை கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக