திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டம் விரிவாக்கத் திட்டத்தை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் நகராட்சி ஆணையர் முஸ்தபா, நகரச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார்
மேலும், ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்ச்சி தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக