திருவண்ணாமலையில் அமைந்துள்ள பர்வதமலை ஏற பக்தர்களுக்கு புதிய கட்டுபாடுகள் அறிவிப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 பிப்ரவரி, 2026

திருவண்ணாமலையில் அமைந்துள்ள பர்வதமலை ஏற பக்தர்களுக்கு புதிய கட்டுபாடுகள் அறிவிப்பு !

திருவண்ணாமலையில் அமைந்துள்ள பர்வதமலை ஏற பக்தர்களுக்கு புதிய கட்டுபாடுகள் அறிவிப்பு !
திருவண்ணாமலை , பிப் 9 -

            திருவண்ணாமலை மாவட்டம் கலச பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,560 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு புனிதமான மற்றும் சவாலான மலை யேற்றத் தலமாகும். இது மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் பிரமராம்பிகை அம்மன் உடனுறை சிவன் கோயிலுக்குப் பெயர் பெற்றது. சித்தர்கள் வாழும் இடமாகக் கருதப்படும் இங்கு, கடப்பாறை நெட்டு போன்ற செங்குத்தான மலைப்பாதைகள், இரும்புச் சங்கிலிகள் மற்றும் ஏணிகள் மூலம் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இந்த மலை சுமார் 4560 அடி உயரம் கொண்டது. இந்த மலை உச்சியில் சிவன் கோயில் அமைந்திருக் கிறது.மலையேற விரும்புவர்களும், ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்களும் இந்த மலையில் ஏறி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு மட்டு மில்லாமல் ஆந்திரா கர்நாடகா, தெலுங் கானா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் அதிக குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அங்கு பல அசம்பாவிதங்கள் நடைபெற்றுவருகிறது  கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 19 பேர் கொண்ட குழு பர்வதமலைக்கு சென்றி ருந்தபோது திடீரென மழை வெள்ளம் ஏற்பட்டு அதில் இரண்டு பேர் சிக்கி அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். அதேபோல் பருவதமலையில் ஏறிய கல்லூரி மாணவர் ஒருவர் மூச்சு திணறி உயிரிழந்தார் இந்நிலையில் தான் பர்வத மலை ஏறுவது தொடர்பாக புதிய கட்டுப் பாடுகளை  மாவட்டம் அறிவித்திருக் கிறது.
( 1 )மலை ஏற பக்தர்களுக்கு காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே  அனுமதி.
( 2 )ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே மலையற அனுமதிக்கப் படுவார்கள்.
( 3 )18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி.
( 4 )நாள் ஒன்றுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் 200 பேருக்கு மலையேற அனுமதி .
 ( 5 ) வெளி மாவட்ட சேர்ந்த பக்தர்கள் ஆன்லைன் பதிவு செய்து மலை ஏற அனுமதிக்கபடும் என   பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் 
-கலையரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad