கோவையில் 17 நிஜ ஹீரோக்களுக்கு அலெர்ட் பீயிங் விருதுகள் வழங்கும் விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 பிப்ரவரி, 2026

கோவையில் 17 நிஜ ஹீரோக்களுக்கு அலெர்ட் பீயிங் விருதுகள் வழங்கும் விழா


கோவையில் 17 நிஜ ஹீரோக்களுக்கு அலெர்ட் பீயிங் விருதுகள் வழங்கும் விழா, 

நாடு முழுவதும் பல்

வேறு சேவைகள் மூலம் நிஜ ஹீரோக்களாக திகழும் 17 பேருக்கு கோவையில் அலெர்ட் அமைப்பின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு பெருமை படுத்த பட்டது.. 



நாடு முழுவதிலும் இடர்பாடுகளின் போது பொதுமக்களை காப்பாற்றுதல், சேவை மனப்பான்மையுடன் செயல்படுதல், பிறருக்கு உதவுதல் உள்ளிட்ட சமூகம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளை கவுரவிக்கும் விதமாக அலெர்ட் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது, அந்த வகையில் இந்த அமைப்பின் 9வது 'அலெர்ட் பீயிங்' விருதுகள் வழங்கும் விழா கோவை, பிஎஸ்ஜி மருத்துவமனை வளாகத்தில்  நடைபெற்றது. இதில், சத்யார்த்தி அமைப்பின்  இயக்கத்தின் நிறுவனரும், நோபல் பரிசு பெற்றவருமான கைலாஷ் சத்யார்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மேலும், கோவையை விபத்தில்லா நகரமாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள 'உயிர்' அமைப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராடும், பிரஜ்வலா அமைப்பின் இணை நிறுவனர் சுனிதா கிருஷ்ணனுக்கும், தொழில் வளர்ச்சியை ஊக்குவித்ததற்காக கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் ராமசாமிக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

மேலும், தன்னை விட மூத்த மாணவன் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடுகையில், அவரை காப்பாற்றிய கோவை கண்ணம்பாளையம் அரசுப் பள்ளி 9ம் வகுப்பு மாணவன் மணீஷ்க்கும், ஜான்சி ரயில் நிலையத்தில் கர்ப்பிணிக்கு உதவிய ராணுவ மேஜர் ரோஹித்திற்கும் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வழங்கினர்

இந்த நிகழ்ச்சியில் அலர்ட் அமைப்பின் தலைவர் மைக் முரளிதரன், நிறுவன அறங்காவலர் கலா பாலசுந்தரம், 

அலர்ட் அமைப்பின் இணை நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான ராஜேஷ் திரிவேதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 கோவை செய்திக்காக கோவை மாவட்ட ஒளிப்பதிவாளர் கார்த்திக்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad