உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலய 178 வது ஆண்டு பிரதிஷ்டை அசனப் பண்டிகை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலய 178 வது ஆண்டு பிரதிஷ்டை அசனப் பண்டிகை.

உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலய 178 வது ஆண்டு பிரதிஷ்டை அசனப் பண்டிகை சேகர தலைவர் சுந்தர் சிங் ஐசக் ராஜா தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலய 178வது பிரதிஷ்டை அசன பண்டிகை வெள்ளிக்கிழமை தொடங்கியது அன்று மாலை ஆயத்த ஆராதனை நடந்தது. 

சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை திரு விருந்து ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலை5 மணிக்கு அசன விருந்து நடைபெற்றது. 

அசன விருந்தை ஜான் தாமஸ் சபை மன்றம் சேகரத் தலைவர் சுந்தர் சிங் ஐசக் ராஜா சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார். உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அசன விருந்தில் கலந்து கொண்டனர். 

இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர். இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு இன்னிசை நற்செய்தி நிகழ்ச்சி நடக்கிறது.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad