மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின், தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு தமிழக முழுவதும் வழங்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியான தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யும் பணியை மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் பி சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியான திருச்செந்தூர் ஒன்றியம் காயாமொழியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே. விஜயகுமார் தலைமையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சுரேஷ் பாபு, ஒன்றிய அவைத் தலைவர் லிங்க குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கந்தன்,
திருச்செந்தூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் நத்தக்குளம் ஜான் வில்லியம்ஸ், ஆழ்வை ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பாலமுருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நடு ஊர் செல்வம், பிரேம் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளரும், திருச்செந்தூர் ஒன்றிய மகளிர் அணி செயலாளருமான ரம்யா நாராயணன் சிறப்பாக செய்திருந்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக