கழுகுமலை தைப்பூச தேரோட்டத்தில் தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

கழுகுமலை தைப்பூச தேரோட்டத்தில் தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.

கழுகுமலை தைப்பூச தேரோட்டத்தில் தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.

தூத்துக்குடி மாவட்டம், தென்பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை, கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்ற நிலையில், தேருக்கு தடி(தடுப்பு) போட்டு வந்த கழுகுமலையை சேர்ந்த சப்பாணி முத்து (70) என்பவர் தவறி தேர் சக்கரத்தில் விழுந்து உயிரிழப்பு.

கிழக்கு பஜார் பகுதியில் தேர் வந்த போது தடி போட முயன்றுள்ளார். அப்போது தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

கழுகுமலை போலீசார் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

உயிரிழந்த சப்பாணி முத்து அங்குள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad