தமிழக முதல்வர் தரம் தாழ்ந்து பிரதமரை விமர்சிப்பது சரியல்ல திருமாவளவன் சோழ மன்னர்களை இழிவாக பேசியதற் கும் கடும் கண்டனம் !
அணைக்கட்டு, பிப் 1 -
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலை வர் ஜான் பாண்டியன் வேலூரில் பேட்டி
வேலூர்மாவட்டம்.வேலூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது கூட்டம் அண்ணாகலையரங்கம் அருகில் நடைபெற்றது இதில் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் கலந்துகொண்டார்.
இதில் திரளானோர் பங்கேற்றனர் முன்ன தாக ஜான் பாண்டியன் செய்தியாளர் களை சந்தித்து கூறுகையில் சமத்துவம் உண்டாக வேண்டுமென ஆங்காங்கே மாநாடுகளை நடத்தி அனைத்து சாதி மக்களும் ஒற்றுமையாக வாழ பொதுக் கூட்டங்களை நடத்துகிறோம்.ஸ்டாலின் எதிர்க்கட்சியையும் எதிர்க்கட்சி ஆளுங் கட்சியையும் குறை சொல்கின்றனர் குறை சொல்ல வேண்டுமென சொல் கின்றனர் மத்திய அரசு 100 நாள் வேலை யை 150 நாட்களாக்கியுள்ளது. எஸ் சிக்களுக்கு துரோகம் செய்தவர் கலை ஞர் அதனால் தான் அருந்ததிய மக்களு க்கு 3 சதவிகித உள் ஒதுக்கீட்டை தந்தார் அவருக்கு யார் அதிகாரம் தந்தது.எல்லா சமுதாயத்திற்கும் இடஒதுக்கீடுவேண்டும்
இரட்டை எஞ்சின் என பிரதமர் மோடி மேடையில் பேசினார் ஆனால் முதல்வர் அது குறித்து தரம் தாழ்ந்து பேசுகிறார் ஆங்காங்கே போஸ்டர்களை ஒட்டுகின்ற னர் இது கண்டனத்திற்குரியது.மேலும் தமிழக அரசு மத்திய அரசிடம் தேவை யான நிதியை கேட்டு பெறாமல் முரண்டு பிடிக்கிறது ஆனால் எல்லாவற்றிற்கும் முதல்வர் மத்திய அரசை குறை சொல்கி றார் தேமுதிக யாருடன் கூட்டணி செல் வார்கள் என்பதை அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.பாஜக யாருக்கும் அழு த்தம் கொடுத்து கூட்டணியில் சேர்க்க வில்லை. சோழ மன்னர்கள் குறித்து திருமாவளவன் சொன்னது அவர் கருத்து இதனை நாங்கள் வன்மையாக கண்டிக் கிறோம். மன்னர்கள் தமிழ் கலாச்சாரத் தை அழித்தார்கள் என்பது திருமாவள வன் பேசுவது அரசியலுக்காகவும் விளம்பரத்திற்காகவும் பேசுகிறார் என கூறினார் இதற்கு முன்பாக பள்ளி கொண்டா பகுதியில் மாவட்ட செயலா ளர். குணசீலன் மாவட்ட இளைஞரணி தலைவர் லாவண்யா தினேஷ் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக