கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 பிப்ரவரி, 2026

கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

1 கிலோ 360 கிராம் கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் மூன்று பேர் கைது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 1 கிலோ 360 கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் 2 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதில் சாமிதோப்பு பகுதியை சேர்ந்த கணபதி என்பவரது மகன் தனுஷ் கிருஷ்ணா (22), பீச் ரோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் விஷால் (18) மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் சவுகான் ஆகியோரிடம் இருந்து 1 கிலோ 360 கிராம் கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்த கைது நடவடிக்கையானது மேலும் தீவிரபடுத்தப்படும் என்றும், கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad