நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டு பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீர் தொடர்ந்து தாமதமாக திறக்கப்படுவதால் பொதுமக்கள், குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
முன்னதாக காலை 6.00 மணிக்கு திறக்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம்தற்போது காலை 7.30 மணிக்கே தொடங்கப்படுகிறது. மேலும் காலை 9.30 மணிக்கே நிறுத்தப்படுவதால் குடிநீர் சேகரிக்க பொதுமக்கள் அவசரப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காலை நேரத்தில் அலுவலகம், தொழிற்சாலை உள்ளிட்ட பணிகளுக்கு செல்ல வேண்டிய பெண்கள் தங்கள் வீட்டு வேலைகளையும், குடிநீர் சேகரிப்பையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டியதால் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் இந்த தாமதம் ஆபரேட்டரின் பணி பொறுப்பின்மை காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உடனடி நடவடிக்கை எடுத்து முன்புபோல் நேரத்திற்கு குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டுமென மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இரண்டு தினங்களுக்கு ஒரு முறை வரும் தண்ணீரையும் குறிப்பிட்ட நேரத்திற்கு வழங்காமலும் சீக்கிரமாகவே நிறுத்தி செல்லும் ஆப்பரேட்டரை கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தி.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக