தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 பிப்ரவரி, 2026

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா.

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா 

கல்லூரி மாணவிகளுக்கான தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா ரோஸ்மேரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரியில் கல்லூரி வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது. 

இவ்விழாவிற்கு ரோஸ்மேரி கல்லூரியின் நிர்வாக பிரதிநிதியான அமர சேகரன் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெனிதா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூன்றாம் ஆண்டு கணிதவியல் துறை மாணவியான கோபிகா வரவேற்றார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும்,நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர் மனோகரன் 97 மாணவிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். 

விழாவில் கல்லூரி தலைவர் ஜெயராஜ், கல்லூரி தாளாளர் பெரோனிகா ஜெயராஜ், கல்லூரி செயலாளர் அரவிந்த் டேவிட் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியின் இறுதியில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி பேச்சியம்மாள் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad