ஊர்க்காவல் படைக்கு 41 தேர்வாளர்கள் தேர்ச்சி
விழுப்புரம் மாவட்டத்தில் 41 ஊர் காவல் படையினர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த 06.02.2026 ஆம் தேதியிலிருந்து கொடுக்கப்பட்டு கடந்த 14.02.2026 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
இதில் 426 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர். அதில் 33 ஆண்கள் 8 பெண்கள் என மொத்தம் 41 தேர்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு பணி நியமன ஆணை 22.02.2026 அன்று மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தினகரன் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் ஞானவேல் மற்றும் மாவட்ட ஊர்க்காவல் படை தலைவர் நத்தர்ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 41 நபர்களுக்கு ஊர்க்காவல் படையின் அடிப்படை பயிற்சி 23.02.2026 நேற்று முதல் 45 நாட்கள் விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழககுரல் செய்திகளுக்காக விழுப்புரம் மாவட்ட செய்தியாளர். சி.அருள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக