ஆலங்காயம் அருகே இருசக்கர வாகனத் தின் மீது மோதிய லாரி 5 வயது சிறுவன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி!
வாணியம்பாடி, பிப்.11-
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த 102 ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா, பிரியா தம்பதியினர். இவர் தனது 2 குழந்தை களை இருசக்கர வாகனத்தில் அழைத்து க் கொண்டு நிம்மியம்பட்டு நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது முல்லை என்ற இடத்தில் எம்.சாண்டு ஏற்றி வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சந்தீஷ் என்ற (5 வயது) சிறுவன் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் அவன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்
மேலும் இளையராஜா மற்றும் அவரது 10 வயது மகள் நட்சத்திர இருவரும் அருகே இருந்த பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர் களை பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலங்காயம் போலீசார் சிறுவன் சந்தீஷின் உடலை மீட்க முயன்ற போது, விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என்று உறவினர் கள், அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரை ந்த வாணியம்பாடி காவல் துணை கண் காணிப்பாளர் மகாலட்சுமி சிறுவனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை உடனடியாக கைது செய்யப்படும் என உறுதியளித்தின் பேரில் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குபதிவு செய்து, விபத்து லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக