ஜனவரி மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட கோட்டார் காவல் நிலையத்திற்கு கேடயம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 பிப்ரவரி, 2026

ஜனவரி மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட கோட்டார் காவல் நிலையத்திற்கு கேடயம்.

ஜனவரி மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட கோட்டார் காவல் நிலையத்திற்கு கேடயம்

மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து இன்று நடைபெற்றது.

சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து நன்னடத்தைப் பிணை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் 
விபத்து ஏற்படுவதை தடுக்க வாகன சோதனையை அதிகப்படுத்தி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
சிவாலய ஓட்ட விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்தல் என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார் 

ஜனவரி மாதத்தில், விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல், குற்றவாளிகளை கைது செய்தல், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருதல் என ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையமாக கோட்டார் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேடயம் வழங்கினார். 

அதனை நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர். சிவசங்கரன் மற்றும் கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர். சண்முக கார்த்திகேயன், ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மேலும் மருத்துவத்துறை, குழந்தைகள் நல அலுவலர், அரசு குற்ற வழக்கறிஞர்கள் உட்பட அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad