உப்பள பெண் தொழிலாளி தற்கொலை.. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 பிப்ரவரி, 2026

உப்பள பெண் தொழிலாளி தற்கொலை..

உப்பள பெண் தொழிலாளி தற்கொலை.

பிப். 11- தூத்துக்குடி முத்தையாபுரம் திருமாஞ்சி நகர் அய்யங்கோயில் தெருவை சேர்ந்தவர் மணி மனைவி முத்து இசக்கி (42). தம்பதிக்கு திருமணமாகி 26 ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை. முத்து இசக்கி, உப்பளத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் குழந்தை இல்லாததால் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதை தொடர்ந்து நேற்று செவ்வாய் கிழமை அன்று முத்து இசக்கி, வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது. 

மேலும் தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று முத்து இசக்கி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad