கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவுக்கு உற்பட்ட சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஒன்றிய அரசின் தற்போது அறிவித்திருந்த நிதி அறிக்கையில் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படாத காரணத்தினாலும், கல்விக்கான நிதியை ஒதுக்காத காரணத்தினாலும் அதிமுக கட்சியின் சார்பாக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இந்த நிதி அறிக்கையை ஆதரித்து குரல் கொடுத்ததற்காகவும் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை நிராகரிக்கப்படுவதையும் கண்டித்து தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக " நிதி இல்லை நிதி இல்லை தமிழ் நாட்டுக்கு நிதி இல்லை" "ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி இல்லை" என்று கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.இதில் சுல்தான்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக.
சூலூர் தாலுகா செய்தியாளர்.
ர.சுப்ரமணியம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக