தாராபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்காத வருவாய் துறை தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 பிப்ரவரி, 2026

தாராபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்காத வருவாய் துறை தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம்



திருப்பூர் கிழக்கு மாவட்டம், தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி, தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 



இந்த போராட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் காளிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பூக்கடை ராமர் முன்னிலை வகித்தார்.


மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, புதுப்பை கிராமம், தங்கமேடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் உட்பட, தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 25 குடும்பங்கள், கடந்த 15 ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா கேட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என பல்வேறு இடங்களில் மனுக்கள் அளித்தும் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கவில்லை என வலியுறுத்தியும்


இதுவரை ஒருவருக்கும் கூட வீட்டு மனை பட்டா வழங்கப்படாததால், அந்த மக்கள் கடும் அவல நிலையில், வாடகை வீடுகளில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.


மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டிய வருவாய் துறை, குறிப்பாக தாசில்தார் ராமலிங்கம், அலட்சிய போக்கில் செயல்படுவதாகவும், மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் காலம் கடத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினர்.


இதனை கண்டித்து, வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து, கடுமையான கண்டன கோஷங்களை எழுப்பினர். 15 ஆண்டுகளாக போராடியும் பட்டா கிடைக்காத நிலை, அரசு அதிகாரிகளின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


தங்கமேடு பகுதி 25 குடும்ப மக்களுக்கு, உடனடியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். இல்லையெனில், போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.


திருப்பூர் மாவட்ட செய்தியாளர் S.ஜாபர்சாதிக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad