700 ஆண்டுகள் பழமை வாய்ந்த எட்டி யம்மன் ஆலய திருவிழா எருது காட்டும் விழாவில் சீரிப் பாய்ந்த காளைகள் !
கலவை , பிப் 24 -
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ எட்டியம்மன் ஆலய திருவிழாவை முன்னி ட்டு எருதுகாட்டும் விழா ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவில் இளைஞர்கள் வீரத்தை காட்டும் விதமாக சீரிப் பாய்ந்த காளை கள் முன்பு எருது காட்டினர். முன்னதாக எட்டியம்மன் கோவில் வளாகத்தில் ஊர் பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டில் விளைந்த நெல் மணிகளைக் கொண்டு பொங்கல் வைத்து தானிய பொருட்களை படையலிட்டு கற்பூரம் ஏற்றி தீப ஆராதனை காட்டி பூஜை செய்தனர்.
தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்ட ஸ்ரீ எட்டியம்மனை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது அப்போது ஏராளமான பொது மக்கள் கலந்துக் கொண்டு சுவாமியை வழி பாடு செய்தனர்.இந்த திருவிழாவை காண மாம்பாக்கம் சுற்றியுள்ள பென்ன கர் சொரையூர், மேலப்பலத்தை, குப்படி சாத்தும், பொன்னமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராள மான இளைஞ்சர்கள் கலந்து கொண்டு எருதுகாட்டும் விழாவை பார்த்து மகிழ்ந் தனர் அதனை தொடர்ந்து அலங்கரிக்கப் பட்ட எட்டியம்மன் சுவாமி இரவு வீதிவுலா வந்தபோது ஊர் மக்கள் குடும்பம் குடும்பமாக தேங்காய், கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக