தீயணைப்பு மீட்பு பணி துறையில் தீ விபத்து தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு குறித்த விழிப்புணர்வு பேரணி!
வேலூர் மாவட்டம தீயணைப்பு மீட்பு பணிகள் துறை, காட்பாடி ரெட்கிராஸ், ஆர்.ஐ.சி.டி நிறுவனமும் இணைந்து தீ விபத்து தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது தமிழ்நாடு மாநில அரசால் ஏற்படுத்தப்பட்ட மாநில தீயணைப்பு ஆணையத்துடன் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை, காட்பாடி ரெட்கிராஸ் சங்கம், ஆர்.ஐ.சி.டி. பாரா மெடிகல் கல்லூரியும் இணைந்து தீ விபத்து தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு குறித்த விழிப்பு ணர்வு பேரணி காட்பாடி காந்திநகர், 8வது கிழக்கு நெடுஞ்சாலையில் மின் வாரிய அலுவலகம் அருகில் பார்சூன் பார்க் வளாகத்திலிருந்து புறப்பட்டு ஆக்ஸிலியம் கல்லூரி சுற்று சாலை, 8வது கிழக்கு நெடுஞ்சாலை வழியாக கல்யாண மண்டபம் சந்திப்பு சாலை வரை நடைபெற்றது. இந்த பேரணியை மாநில தீயணைப்பு ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி). சங்கர்ஜிவால், அவர்கள் தொடக்கி வைத் தார். உறுப்பினர்கள் டாக்டர் எ.எம். இக்ராம், கே.பி.சத்யமூர்த்தி, எம்.நமச்சி வாயம், இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி கிளை அவைத்தலைவர் முனைவர். செ. நா.ஜனார்த்தனன், அவைதுணைத்தலை வர் ஆர்.விஜயகுமாரி, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆர்.சீனிவாசன், பி.என். ராமச்சந்திரன்,எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், ஞானவேல், அருள்சுடர், கல்வி நிறுவன இயக்குநர் கே.எஸ்.அஸ்ரப் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலு வலர்கள் பங்கேற்றனர். தீ தடுப்பு நடை முறைகள், தீ பரவாமல் தடுக்கும் முறை கள், விபத்து காலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், பேரிடர் குறித்த விழிப்புணர் பதாகைகள் ஏந்திய படி பாரா மெடிகல் கல்லூரியை சார்ந்த 150 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
விருதம்பட்டு காவல் ஆய்வாளர் சர்புதீன் தலைமையில் காவலர்கள் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்டோர் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக