நாகர்கோவில் - மார்ச் 10ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 25 பிப்ரவரி, 2026

நாகர்கோவில் - மார்ச் 10ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

மார்ச் 10ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் அதுவும் பொதுமக்கள் பெருந்திரளாக புழங்கக்கூடிய இடங்களில் மாடுகள் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக நடந்து கொண்டிருக்கிறது எனவும்,

தொடர்ச்சியாக இந்த மாடுகளால் பல்வேறு பட்ட விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கின்றன பல்வேறு உயிர்களை அது காவு வாங்கி உள்ளது.

ஆகவே மாநகராட்சி நிர்வாகமானது உடனடியாக பொதுமக்களுக்கு நோட்டீஸ்கள் விளம்பரங்கள் மூலம் பொது மக்களுக்கு அறிவித்து மாடுகளின் சொந்தக்காரர்கள் தங்களது மாடுகளை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து வளர்த்துக் கொள்ள வேண்டும் 

பொது மக்களுக்கு இடைஞ்சலாக சாலையோரங்களிலோ அல்லது பொதுமக்கள் புழங்கக்கூடிய சந்தைகள் மற்றும் பகுதிகளில் வந்தால் உடனடியாக அதனை பிடித்து அபராதம் விதிக்கப்படும் 

மீண்டும் அதே உரிமையாளரின் மாடுகள் வந்தால் அவைகள் நிரந்தரமாக கோசலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும்

மாநகராட்சி நிர்வாகமானது உடனடியாக பொதுமக்களுக்கு விளம்பரங்கள் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் பத்து தினங்களுக்குள் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக மாடுகள் சாலையோரங்களில் அல்லது பொது மக்கள் வந்து செல்லும் இடங்களில் மாடுகளின் நடமாட்டம் இருந்தால், வரக்கூடிய மார்ச் மாதம் பத்தாம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கும் இஸ்லாமிய சனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் முஜீப் ரகுமான் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு காலை 11 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டார்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad