95 சதவீத வழக்குகளை முடித்த திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு இரண்டாம் இடம் இன்ஸ்பெக்டருக்கு உற்சாக வரவேற்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

95 சதவீத வழக்குகளை முடித்த திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு இரண்டாம் இடம் இன்ஸ்பெக்டருக்கு உற்சாக வரவேற்பு


திருப்பூர் மாநகர காவல் நிலையங்களில் ஒன்றான வடக்கு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டில் தமிழகத்திலேயே சட்டம் ஒழுங்கு குற்ற வழக்குகள் திருட்டு உள்ளிட்ட 95% வழக்குகளை முடித்து தமிழகத்தின் தலைசிறந்த இரண்டாவது காவல் நிலையமாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது இதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா அவர்களிடம் சான்றிதழ்களை வழங்கினார் இரண்டாவது இடத்திற்கான பரிசினை பெற்று திருப்பூர் வந்த இன்ஸ்பெக்டர் பிரேமா அவர்களுக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன் மாண்புமிகு  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடினர் மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இடமும் 2024 ஆம் ஆண்டு இரண்டாம் இடமும் 2025 ஆம் ஆண்டு இரண்டாம் இடமும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது திருப்பூர் வடக்கு காவல் நிலையம் பொதுமக்களுக்கு நண்பனாக இருந்து சிறப்பாக தனது கடமையை செய்து வருவதாகவும் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்ததற்கு மகிழ்ச்சியாக உள்ளதாகவும் புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்கு உரிய மரியாதை மற்றும் அவர்கள் பிரச்சனையை பொறுமையாக கேட்டறிந்து தீர்த்து வைப்பதாகவும்  அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர் மாவட்ட செய்தியாளர் அ. காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad