அனைத்திந்திய விவசாயம் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் இரண்டு கிளைகளை தலைவர் ஜி.கே.விவசாயமணி திறந்து வைத்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

அனைத்திந்திய விவசாயம் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் இரண்டு கிளைகளை தலைவர் ஜி.கே.விவசாயமணி திறந்து வைத்தார்


அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் இரண்டு கிளை அலுவலகங்கள் புதிதாக திறக்கப்பட்டன  பிரிட்ஜ்வே காலனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அனைத்து இந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் திருப்பூர் செல்லம் நகரில் திருப்பூர் தெற்கு தொகுதி மோட்டார் பிரிவு தலைவர் எஸ்.கே. நாச்சிமுத்து அவர்கள் முன்னிலையில் புதிய கிளை அலுவலகம் சங்க நிறுவன தலைவர் ஜி.கே.விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணியம் அவர்கள் திறந்து வைத்தார் அதனை தொடர்ந்து  15 வேலம்பாளையத்தில்  திருப்பூர் மாநகர ஒன்னாவது மண்டல அலுவலகம்  மகளிர் அணி அமைப்பாளர் திருமதி விஜயலட்சுமி அவர்களின் முன்னிலையில் நிறுவன தலைவர் ஜி.கே.விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் மேலும் ஒரு அலுவலகத்தை திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் மாநில சங்க பேச்சாளர் சந்திரசேகரன் தலைமை நிலைய செயலாளர் நாகேந்திரன் கிழக்கு மாவட்ட தலைவர்  ஸ்ரீனிவாசன் தெற்கு மாவட்ட தலைவர் பாபு கண்ணன் தெற்கு தொகுதி அமைப்பாளர் இரத்தினசாமி வடக்கு மாவட்ட செயலாளர் ரூபா குமார்  மூலனூர் ஒன்றிய தலைவர் பழனிச்சாமி, சிவராஜ் எரிப்பாளையம் மஞ்சுளா அன்னக்கொடி அங்கேரிபாளையம் பாபு சிவகாமி வேலுச்சாமி தாமோதரன் செல்வராஜ் ஒன்னாவது மண்டல செயலாளர் சிவசுப்பிரமணியம்  உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளும் கிளை உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர் விழா முடிவில் அனைவருக்கும் உணவு விருந்து அளிக்கப்பட்டது

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad