பிப்.2- தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள சவேரியாபுரத்தைச் சேர்ந்த ரூபன் மகன் ஜெயசீலன்( 22) அதே பகுதியைச் சேர்ந்த பெனிடிக் மகன் செலக்சன் மற்றும் கனகராஜ் மகன் அசோக் மற்றும் தனபால் மகன் ஜேசுராஜ் 4 நண்பர்கள் சேர்ந்து நேற்று விடுமுறை தினம் அன்று மது அருந்தி உள்ளனர்.
இந்நிலையில் மது அருந்திய ஜெயசீலனுக்கு வாந்தி ஏற்பட்டுள்ள நிலையில் பேய்குளம் அருகிலுள்ள குளத்திற்கு சென்று கை கால்களை கழுவி உள்ளனர்.
போதை அளவுக்கு அதிகமாக இருந்ததால் கால் தவறி ஆழமான பகுதிக்குள் விழுந்தனர். காப்பாற்ற நின்ற மூன்று பேருக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் ஜெயசீலன் என்பவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை குறித்து சாத்தான்குளம் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜமூர்த்தி தலைமையில் தீயணைப்பு அலுவலர்கள் குளத்தில் இறங்கி ஜெயசீலனின் உடலை மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையில் போலீசார் ஜெயசீலனின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயசீலனின் நண்பர்கள் மூன்று பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக