விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு.

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் விளவங்கோடு கிராமம் மடிச்சல் கீரங்குளம் பகுதியில் இன்று மதியம் 2 மணி அளவில் ஒரு ஆண் இறந்த நிலையில் தண்ணீரில் மிதந்துள்ளார் தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டனர். 

பின்னர் சடலம் அரசு மருத்துவமனை குழித்துறைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த நபர் காட்டு விளை குழித்துறை பகுதியில் வாடகைக்கு வசித்து வந்த ஜெகன் என்பதும், அவர் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad