காவல்துறை கூடுதல் இயக்குனர், சட்டம் மற்றும் ஒழுங்கு அவர்களின் உத்தரவுப்படி, கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில், இன்று (02.02.2026) ஆறு நாட்கள் புத்தாக்க பயிற்சி, மாவட்டத்தில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரையிலான காவல்துறையினருக்கு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 40 நபர்கள் கலந்து கொண்டனர்.
இன்று முதல் நாள் வகுப்பினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின், ஆரம்பித்து வைத்து, காவலர்களுக்கு அறிவுரைகளும் புத்தாக்க பயிற்சியின் நோக்கத்தினையும் எடுத்துரைத்தார்.
இந்த பயிற்சியானது,
காவல்துறையினரின் செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படுத்தும் வண்ணம், புதிதாக அமல்படுத்தப்பட்ட சட்டங்கள் குறித்தும், காவல்துறையினரின் பணி மற்றும் பொறுப்புகள் குறித்தும் விரிவாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட உள்ளது.
இந்த பயிற்சியினை கன்னியாகுமரி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பிற துறையினரை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு ஒவ்வொரு குழுவாக இந்த பயிற்சி வகுப்பானது தொடர்ச்சியாக இந்த வருடம் முழுவதும் நடத்தப்பட உள்ளது.
இந்நிகழ்வில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் மற்றும் மார்த்தாண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நல்லசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக