தென்திருப்பேரை ஸ்ரீதேவி வடபத்திரகாளியம்பாள் ஸ்ரீதேவி சந்தன மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

தென்திருப்பேரை ஸ்ரீதேவி வடபத்திரகாளியம்பாள் ஸ்ரீதேவி சந்தன மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்.

தென்திருப்பேரை விஸ்வகர்மா ஸ்ரீதேவி வடபத்திரகாளியம்பாள் ஸ்ரீதேவி சந்தன மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் விழா 

தென் பொதிகை தாமிரபரணி நதி பாயும் சீமை தென்திருப்பேரையில் விஸ்வகர்மா ஸ்ரீதேவி வடபத்திரகாளியம்பாள் ஸ்ரீதேவி சந்தன மாரியம்மன் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம், ஆலய மூலஸ்தானமும், விமானம் அமைக்கப்பட்டது 

தை மாதம் 21ம் தேதி (04/02/2026) புதன்கிழமை காலை 6.00 மணிக்கு மங்கள இசையுடன் கணபதி ஹோமம் மகாலெட்சுமி ஹோமம் நவக்கிரக ஹோமம் கோபூஜையுடன் தொடங்கியது 
மாலை 6.00 மணிக்கு தாமிரபரணி நதியில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வலம் வந்தது இரவு 7.00 மணிக்கு மங்கள இசையுடன் வாஸ்து சாந்தி பிரவேச பலி வேத பாராயணம் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது 

தை மாதம் 22ம் தேதி (05-02-2026) வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு மங்கள இசையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது 

மாலை 6.00 மணிக்கு சுமங்கலி பூஜை 
இரவு 7.00 மணிக்கு மங்கள இசையுடன் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று யந்திர ஸ்தாபனம் மருந்து சாத்துதல் நடைபெற்றது 

தை மாதம் 23ம் தேதி (06-02-2026) வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு மங்கள இசையுடன் ரக்சாபந்தனம் வேத பாராயணம் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று கடம்புறப்பாடு விமான கலசங்களுக்கும் ஸ்ரீதேவி வடபத்திரகாளியம்பாள் ஸ்ரீதேவி சந்தன மாரியம்மன் ஸ்ரீகன்னிவிநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது 

அதன் பிறகு மஹா அபிஷேகம்  தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது 

இரவு 7.00 மணிக்கு ஸ்ரீதேவி வடபத்திரகாளியம்பாள் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா 
இரவு 10.00 மணிக்கு பைரவர் பூஜையுடன் நிறைவு பெற்றது 

விழாவினை மா.சண்முகசுந்தரம், சு.சீனிவாசன், அ.மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேக விழா கமிட்டியார்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad