திருப்பூர் மாவட்டம்
தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டிணம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பிரவின் (வயது 28). அவருடைய மனைவி தர்ஷினி. கூலித்தொழிலாளி. கபடி வீரரான இவர், கல்லூரியில் படித்த போது, அதே கல்லூரியில் படித்த தர்ஷினியை காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
நேற்று காலை பிரவீன் விஷம் குடிந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள வயலில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர். ஏற்கனயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்த தகவலின் பேரில் அலங்கியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் குடும்ப பிரச்சினை காரணமாக பிரவின் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. திருமணமான 6 மாதத்தில் பிரவீன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக