திருப்பூர் மாநகராட்சி எம்சிசி சென்டரில் விஷ வாயு தாக்கி தூய்மை பணியாளர் மயக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி இதனால் தூய்மை பணியாளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது இது பற்றி
திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 3வது மண்டலம் பிரிவு 11 வார்டு எண் 60 தாராபுரம் சாலையிலுள்ள கோவில் வழி பேருந்து நிலையம் அருகிலுள்ள MCC யுனிட் -2 ல் பணிபுரிந்து வருகின்ற தூய்மை பணியாளர் கையுறை, முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் பணியில் அமர்த்தியதால் தூய்மைபணியாளர் பெருமாள் என்பவருக்கு வாயு தாக்கி மூச்சு திணறல் காரணமாக தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் இது தொடர்பாக உடனடியாக உரிய தீர்வுகண்டு அவருக்கு உரிய மருத்துவ உதவியும் நிவாரணமும் வழங்கவும் மாநகராட்சியில் பணிபுரிகின்ற அனைத்து தூய்மைபணியாளர் பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 3வது மண்டலம் பிரிவு 11 வார்டு எண் 60 தாராபுரம் சாலையிலுள்ள கோவில் வழி பேருந்து நிலையம் அருகிலுள்ள MCC யுனிட் -2 செயல்படுகின்றது.
இங்குள்ள MCC சென்டரில் 6 பணியாளர்கள் பணி செய்யும் இடத்தில் இரண்டு பணியாளர்களை வைத்து மேற்பார்வையாளர் வலுக்கட்டாயமாக 6.பேர் செய்ய வேண்டிய வேலையை இருவரை வைத்து கூடுதல் வேலை செய்ய நிர்பந்தம் செய்ததால்
அதிக பணி சுமை காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு அவ்வப்போது உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக தூய்மை பணியாளர்களுக்கு என்பவருக்கு கையுறை, முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் பணியில் அமர்த்தியுள்ளனர்.
இந்த நிலையில் 06-02-2026ம் தேதி காலை 8.30 மணியளவில் மேற்படி MCC சென்டரில் திடக்கழிவு தொட்டியில் இறங்கி பணிபுரிந்த கொண்டிருக்கும் போது திடீரென வாயு தாக்கி தூய்மைபணியாளர் பெருமாள் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார் அதன் தொடர்ச்சியாக இங்குள்ளவர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
எனவே உடனடியாக மேற்படி MCC சென்டரில் கள ஆய்வு செய்து அனைத்து தூய்மைபணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியும் அங்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து தற்போது வாயு தாக்கி பாதிக்கப்பட்ட தூய்மைபணியாளர் பெருமாளுக்கு
உரிய மருத்துவ உதவியும் நிவாரணமும் வழங்கவும் மாநகராட்சியில் பணிபுரிகின்ற அனைத்து தூய்மைபணியாளர் பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்குவதை உறுதிசெய்ய வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக