திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள விநாயகர், மாரியம்மன், கருப்பராயசுவாமி, கன்னிமார் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி காலை 7 மணிக்கு 4-ம் கால யாகபூஜை, பூர்ணாகுதி, கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் விமான கோபுரம் மற்றும் விநாயகர், மாரியம்மன் தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அவினாசி அருள்நந்தி சிவாச்சார்ய சுவாமிகள் கும்பாபிஷேக சர்வசாதகம் செய்தார். புனிதநீர் ஊற்றியபோது விமான கோபுரத்தின் மேல்பகுதியில் கருடன் வட்டமிட்டதை பக்தர்கள் பக்திபரவசத்துடன் வழிபட்டனர். விழாவை தொடர்ந்து 15 வேலம்பாளையம் முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ்.பி.மணி சார்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார், மேயர் தினேஷ்குமார், தி.மு.க. வடக்கு மாநகர செயலாளர் தங்கராஜ், 10-வது வார்டு கவுன்சிலர் பிரேமலதா கோட்டாபாலு, மாநகராட்சி கவுன்சிலர்கள் சகுந்தலா ஈஸ்வரன், தனலட்சுமி ராமசாமி, செல்வராஜ், மாவட்ட வர்த்தக அணி முன்னாள் அமைப்பாளர் பெரியார்காலனி எம்.எஸ்.மணி, கோவில் கமிட்டி நிர்வாகிகள் ரத்தினசாமி, பரந்தாமன், ரவி, பெரியசாமி, குமார், கமிட்டியார் விஸ்வநாதன் உள்பட அனுப்பர்பாளையம், அனுப்பர்பாளையம்புதூர், 15 வேலம்பாளையம், சோளிபாளையம், காவிலிபாளையம், காவிலிபாளையம்புதூர், சிறுபூலுவபட்டி உள்ளிட்ட 7 ஊர்களை சேர்ந்த கோவில் நிர்வாகிகள், பக்தர்கள், ஊர் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக