தாராபுரத்தில் அரசு கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் அரசு தொழிற்பயிற்சி மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழக மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் திருமதி.கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு..
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட ஐ.டி.ஐ கார்னர் அருகே அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது இந்த கல்லூரியில் நேற்று 10.02.2026 காலை சுமார் 11 மணியளவில் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் சுமார் 177 மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, "உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ்" விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.இதில் அரசு கல்லூரி முதல்வர் திருமதி புஷ்ப லதா தலைமையில், கல்லூரி கல்வி மேம்பாட்டுதுறை தலைவர் அரிமா கோபாலகிருஷ்ணன், தமிழக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் ஆகியோர்களின் முன்னிலையில், மடிக்கணினி வழங்கப்பட்டது. மேலும் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் சுமார் 187 மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கினர் இந்நிகழ்ச்சியில் திமுக கட்சியின் மாவட்ட வழக்கறிஞர் செல்வராஜ், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக